செவ்வாய், 28 ஜூன், 2016

எனது கவிதை

எனக்கு அவள் முழுமதி பெண்,
தாராளமாய் தரலாம் முழு மதிப்பெண்;
ஒருநாள் சாலையில் எதிர் பார்த்தேன்,
எனக்கானவளாக அவளை எதிர்ப்பார்த்தேன்;
என் இதயமே ஆனது அவளது இருக்கை,
இவைகளை சொன்னதால் அடித்தது என்னை அவளது இரு கை.!

'ச'கரவரிசை கதை

சத்திவேல்,
சாந்தி,
சித்ரா,
சீனிவாசன்,
சுமதி,
சூர்யா
சென்று
சேர்ந்தனர்
சைக்கிளில்
சொர்ணபுரம்,
சோபனாவின் குழந்தை
சௌமியாவைக் கண்டு, பரிசுகளுடன்
'ச்'சும் தந்தனர்.!

'க'கரவரிசை கதை

கட்டம்போட்டு
காய்நகர்த்தி
கிட்டயிருந்து
கீழேத்தள்ளி
குழிபறிச்ச
கூட்டாளியின்
கெஞ்சலை
கேக்காமல்
கையைவெட்டி
கொண்டுபோனான்
கோர்ட்டுக்கு
கௌதமன்.!

'ந'கரவரிசை கதை

நள்ளிரவு
நாளிலே
நித்திரையில்
நீ
நுழைந்தாய்
நூலிழையில்
நெஞ்சுக்குள்ளே,
நேசத்தால்
நையப்புடைத்து
நொறுக்கினாய்
நோவாவை;
நௌ, ஆர் யூ ஹாப்பி?

எனது கவிதை

நீயெப்போதும் செல்லும் நகரப் பேருந்து,
நீ வராததால் ஆனதின்று நகராப் பேருந்து.
ஆதலால் எட்டவில்லை நிகர வருவாய்,
ஆயுசுக்கும் எனக்கு நிகரா நீயே வருவாய்.!

வெறுமை

வெறுமை:












வெறுமை பற்றிய கவிதைகூட
வெறுமையாக  இருக்கிறதே
அடடே '!' குறி.

தலைப்பு

தலைப்பு:

தலைப்பையெழுதியாயிற்று இன்னும் ஒருவரிகூட தோணவில்லை
தலைப்பிற்கேற்ற கவிதையாக, தலைப்பு 'வெறுமை'
பொருத்தமாகத்தான் இருக்கிறது

அடடே '!' குறி

நட்பூ

'ந'ட்பு ஒரு 'ம'தமானது,
'நா'ம் பார்த்து 'மா'தமானது,
'நி'னைவுகள் என்றும் 'மி'தமானாது,
'நீ'ங்காமல் நெஞ்சில் 'மீ'தமானது.!


அய்லான் குர்தி

சிரியா குழந்தை ஒன்று, இனியும்
சிரியா குழந்தை ஆனது அன்று,
அதை ஏன் என்று கேட்பாரில்லை இன்று.!

உலகையே அழ வைத்துவிட்டாய் 'அய்லான் குர்தி',
இனியும் சிந்தப்படவேண்டாம் அயலானின் குருதி,
பகிருகிறேன் இதை பொதுநலன் கருதி.!


புதன், 8 ஜூன், 2016

நட்பு

நான் நீயாவதும்
நீ நானாவதும்
நட்பு;
நான் நானாவதும்
நீ நீயாவதும்கூட
நட்புதான்.!


செல்லப்பெயர்

செல்லப்பெயர்:

'கூப்பிட மட்டும்தான்' பெயர் என்பதுபோய்,
'தான்மட்டும் கூப்பிட' என்பதாகும் பெயர்
செல்லப்பெயர்.!

வெறுயெவரும் வேறுயெவருக்கும் வைத்திராத பெயர்;
இருவர்மட்டுமே அறிந்த இருவருக்குமான பெயர், இந்த
செல்லப்பெயர்.!

குறிப்பு:
நமக்கு மிகவும் பிடித்தவருக்கு செல்லப்பெயர் வைப்பதென்பது ஒரு கவிதை எழுதுவதற்கு சமமென்றால் அந்த செல்லப்பெயர் பற்றிய இந்த கவிதை?