வியாழன், 20 டிசம்பர், 2018

தமிழரசி 3

ஒருநாள் என் Friendடோடு திரைப்படத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து Theatreக்கு முன்னரே சென்று Ticket வாங்கியபின் இன்னும் அந்த Dog வராத சூழ்நிலையில்  என் Facebookல் சும்மனாச்சிக்கி நான் போட்ட Statusஸும் அதற்கு வந்த Replyயும்.

Status:
"Time ஆச்சு, Movieய வேற Start பண்ணிருவான் இன்னும் காணமே AVA _ A?" (L/N)
Note: அப்போது நான் Single, இப்பொழுதும் கூட நான் அக்மார்க்  Single தான்.



Reply:
"Novie, நீ 'N'னதான் Try பண்ணாலும் உனக்கு 'L'லாம் Set ஆவாது, So நீ இ்ன்று 'N' கூடத்தான் படத்தை பார்த்தாகவேண்டும்.!"

இந்த Reply அனுப்பி 5 நிமிடத்தில் எதிர்பாராமல் வந்து சேர்ந்தாள் என் மூன்றாவது தமிழரசி (நான் சொன்ன அந்த Dog அன்று வரவில்லையென்பது வேறுகதை).!

தமிழரசி 2

நான் ஒரு பெண்ணிடம் அவளை காதலிக்க அனுமதிகோருவது போலும் அவளதற்கு கட்டளை பிறப்பிப்பது போலவும் கற்பனையாக அமையப்பெற்ற உரையாடல்.

நான்: அன்பே, உன் இடம்* அதில் முழுமைக்கும் நான் பின்னாலே கணவனாக நிரந்தரமாக குடியேற இப்போது காதலனாகத் தங்க கொஞ்சயிடம் கொடு.!

அவள்: காதலனாக இப்போது என் பின்னாலே 'வலம்' வந்தால் நான் கேட்பதையெல்லாம் வாங்கித் தந்தால் என்னைக் கொஞ்ச என்னிடமதில் கணவனாக உனக்கு 'இடம்' கிடைத்தாலும் கிடைக்கலாம்.!

* - ♥ Located In Left

எனது தமிழரசிகள்

இப்பகுதியானது கற்பனையாக நான் இதுவரை என் வாழ்நாளில் சந்தித்ததேயிராத பெண்களுடன் நடத்தியதுபோன்ற சுவாரசியமான மேலும் கலகலப்பான மொழியறிவுசார் உரையாடல்களின் தொகுப்பாக அமையப்பெற்றுள்ளது. பாரதிக்கு ஓர் 'கண்ணம்மா' மாதிரி எனக்கு இங்கு ஓர் 'தமிழரசி'.

தமிழரசி1:
நான் 'ஓவியா' என்ற பெண்ணுக்கு எனது காதலை குறுஞ்செய்தி ஒன்றின் மூலம் தெரிவிப்பதுபோலவும் அவளும் அதை நாசூக்காக குறுஞ்செய்தியின் மூலமாகவே மறுப்பதுபோலவும் 'கற்பனையாக' (Note This Point கற்பனையாக) அமைக்கப்பட்டுள்ளது.

Me To Oviya:
எனதருமை 'Ovi', நீ கூட என்(N)னோடு சேர்ந்து இருந்தால்தான் நான்கூட 'Novi' என்று முழுமையாகிறேன்.!

Oviya To Me:
எனதருமை 'Novi', இனிமுதல் 'No' More 'Vi'(We).!

வெள்ளி, 23 நவம்பர், 2018

என் கிறிஸ்து

ஏதுமில்லாமல் இருந்தேன் நான்,
யாதுமாகி வந்தீர் எனக்காய்;

ஒருபோதும் விலகாது நின்றீரே,
எதிலேயும் விழுகாது காத்தீரே;

உம்மையல்லாமல் ஒருபோதும் என்னாலுமே,
ஒன்றுஞ்செய்ய இயலாதுதான் எந்நாளுமே;

என் பாவங்கள்யாவும் நீங்கத்தானே,
பலியானீரே எனக்காக நீங்க தானே;

எனக்காக சிலுவையில் நிர்வாணியானிரே,
பாவத்தைப்போக்கும் நிவாரணியுமானிரே.!


சனி, 27 அக்டோபர், 2018

நினைவணிதல்

முதன்முதலில் உன்னை பார்த்தபோது
நானணிந்திருந்த ஆடையை
திரும்ப எப்போதெல்லாம்
அணிகின்றேனோ
என்னையுமறியாமல்
உன் நினைவுகளையும்
சேர்த்தே அணிந்து கொள்கிறேன்நான்.!

முன்குறிப்பு:
இக்கவிதை உன்னைப்பார்த்த நாளன்று(27.10.2015) அணிந்திருந்த உடையை இன்று திரும்பவும் நானணிய நேரிட்டதால் இப்போது தோன்றியது மேலும் நாட்காட்டியில் இன்று தேதியை பார்த்தபோதுதான் ஞாபகம் வந்தது சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பாக இன்றையநாளில்தான் நான் உன்னை பார்த்தேன்.!

நடுகுறிப்பு:
அந்த 'உன்னை' என்பது யாராக இருக்குமென்று யாரும் ரொம்ப யோசிக்கவேண்டாம், ஏனென்றால் அது எனக்கேத்தெரியாது மேலும் இது அந்த 'உன்னை'க்கே தெரியாது.

பின்குறிப்பு:
உடனே அப்போ மூன்று வருடங்களாக ஒரே ஆடையைத்தான் போட்டுட்டு இருக்கியான்னு யாராச்சும் கேட்டிங்கனா பாத்துக்கோங்க.!?

செவ்வாய், 23 அக்டோபர், 2018

இங்லிபீஸூ சாட்டிங்கு

Last Night Chat Between Me And My Ex:

Me: My Dear Ex, Can I Exit Completely From It?
Ex: S, U Can.
Me: Thank God, I Keep & I Place Your 'S', In Between 'It' Infront Of My 'Ex', But It Shows Still 'exiSt'. What To Do, And Even I Can't To Don't.!?
Ex: 😡😡😡😡😡😡😡

*It - Luv

Note:
இது முழுக்க முழுக்க என் கற்பனையான வேடிக்கையான பதிவு மட்டுமே. யாரும் அந்த என்னுடைய 'Ex' யாராக இருக்குமென்று ரொம்ப யோசிக்க வேண்டாம் ஏனென்றால் 'Ex'cess ஆக இருக்கிறார்கள்.!

புதன், 17 அக்டோபர், 2018

நீ(தி)யும் நானும்

"நீதிமன்றத்திற்கோர் நன்றிநவிலல்"

நீண்ட நெடுநாளுக்குப் பிறகு என் முன்னாள் காதலன் 'ராஜா'வை அவனது குடும்பத்துடன் சேர்த்து சந்தித்தது சற்றே வருத்தமளித்தாலும் மீண்டும் அவனைக்கண்ட மகிழ்ச்சியே போதும் என்றிருந்து எனக்கு அப்பொழுது. ஒரு சில பரஸ்பர உரையாடல்களுக்குப் பிறகு இருவரும் எங்களது கட்செவியஞ்சல் எண்களை பரிமாறிக் கொண்டபின் விடைபெற்றோம்.

எங்களது உரையாடலானது கட்செவியஞ்சல் வாயிலாக அன்று இரவே தொடங்கி தினந்தோறும் என்றாகிப்போன ஓரிரு வாரங்கள் கழித்து எனக்குள் புதைந்துபோன அந்த பழைய காதலானது மீண்டும் தளிர்த்தது. எனக்கும் திருமணம் ஆகிவிட்டதுதான், நானதை அவனிடம் தயக்கத்தோடே தெரிவிக்க அவனோ அது எனக்கு கடந்தவாரமே மீண்டும் பூத்துவிட்டததென்றான்.

பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து நாங்களிருவருமே தத்தம் வாழ்க்கை துணைகளுக்குத் தெரியாமல் அவர்களை ஏமாற்றிவிட்டு வெளியூர் சென்று சந்தோசமாக வாழலாம் என்று நினைத்து பேருந்தில் ஏறலாம் என்ற சமயத்தில் திடீரென வந்தது எங்களது வாழ்வை மாற்றிப்போடும் அந்த செய்தி. அதைக்கேட்டு எங்கள் முடிவை மாற்றி அங்கேயே தைரியமாக இருக்க முற்பட்டோம்.

அந்த செய்தியானது "உச்ச நீதிமன்றம் 'Section 377'யையும் மற்றும் 'Section 497'யையும் தண்டனையற்ற குற்றமாக அறிவித்துவிட்டது". எனவே நாங்கள் இனி எதற்காக பயந்து ஒதுங்கி வாழவேண்டும் தைரியமாகவே எங்களூரிலேயே  இப்பொழுது தனிவீடு எடுத்து மிகவும் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். எங்களை வாழவைத்த நீதிக்கு என் நன்றி.!

இப்படிக்கு,
சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கும்
சிவா.
(இந்திய குடிமகன்)


குறிப்பு: நான் இதனை ஆதரிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, ஒப்புக்கொள்ளவில்லை. Climaxல் ஒரு Twist தரலாமேயென்றுதான் கதையை இப்படி முடித்தேன். மேலும் இது ஒரு பாவம், ஒரு நாடே இதனை அங்கீகரிப்பது அந்நாட்டிற்கு சாபத்தை கொண்டுவரும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

எதிர்க்கவிதை

பெண் மனம்:

பிரம்மிக்கப்பட்டு
ரசிக்கப்பட்டு
தொல்லையாகிப் பின்
இல்லாமல்போவதே இந்த
பாசத்தின் இயல்பு.!
விலகிச்செல்ல விழைந்தாலும்
விதியென்னவோ விளையாடித்தான் பார்க்கிறது.!
தனித்து நடக்கப் பழகிக்கொள்கிறேன்,
என் சாலையைக் கடக்க நான் மட்டும் போதும்,
உனக்கான என் இறுதி நிலைப்பாடு.!

ஆண் மனம்:

இல்லாததையும்கூட
தொல்லையென்றெண்ணாமல்
ரசிப்பதும் பிரம்மிப்பதுமே பாசத்தின் இயல்பு.!
விதி விளையாடித்தான் பார்க்கும்
நீ விழைகிறாயா இல்லை விலகுகிறாயாவென.!
போ,
தணிந்தபின் வந்து
தனித்து நடக்க
துணிந்ததை மற,
உன் சாலையோரமே காத்திருப்பேன்,
உனக்கானவனின் இறுதி நிலைப்பாடு.!

குறிப்பு:
இங்கு 'பெண் மனம்' பகுதியின் கவிதையானது, ஒரு பெண் தனது முகநூல் பதிவில் பதிவிட்டது. நான் அக்கவிதைக்கு எதிர்க்கவிதையாக ஒரு ஆணின் பார்வையில் இக்கவிதையினை நீட்டித்துள்ளேன்.
முற்பாதி நன்றாயிருந்தால், அதன் முழுப்புகழும் அப்பெண்ணிற்கே சொந்தம். பிற்பாதி நன்றாயிருந்தால் (இருக்காது, அப்படி ஒருவேளையிருந்தால்) எனக்குச் சொந்தம்.

புதன், 11 ஏப்ரல், 2018

Facebook

FaceBookகிலாவது இருந்துவிட்டு போகிறேன்
 Un Friend ஆக,
ஆக்கிவிடாதே என்னையும்
 Unfriend ஆக.!